முதல்வர் வேட்பாளர்.. பாஜகவின் முக்கிய அறிவிப்பு..

761

சட்டமன்ற தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில், தமிழகத்தின் அரசியல் கட்சிகள், அதுதொடர்பான பணிகள் மும்மரமாக இறங்கியுள்ளன. ஆளுங்கட்சியான அதிமுக பாஜக உடனான தங்களது கூட்டணியை மீண்டும் தொடர உள்ளனர்.

ஆனால், இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே, யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. தமிழகத்தின் முதல்வர் வேட்பாளரை பாஜகவின் மத்திய தலைமை தான் முடிவு செய்யும் என்றும் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

முதல்வர் வேட்பாளரை தாங்கள் தான் முடிவு செய்வோம் என்று அதிமுக-வும் விடப்பிடியாக இருந்து வந்தது. இந்நிலையில், பாஜகவின் தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, பேட்டி அளித்துள்ளார்.

அதில், தமிழகத்தில் அதிமுக பொரும்பான்மையான கட்சி என்பதால், முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மாணிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனை அறிந்த நெட்டிசன்கள், பாஜக பின்வாங்கிவிட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement