“நாயை அடிப்பது போல் அடிப்பேன்!” ஆளுங்கட்சியினரை மிரட்டிய பாஜக பெண் வேட்பாளர்!

523

மேற்கு வங்காளத்தில் கட்டல் தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுபவர் பாரதி கோஷ். ஐ.பி.எஸ்.

அதிகாரியாக இருந்த இவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வீட்டின் முன் அமர்ந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை மிரட்டியுள்ளார்.

அவர் அந்த கட்சி தொண்டர்களிடம் பேசியதாவது:-

“நீங்கள் வாக்கு பதிவு செய்ய கூடாது என பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறீர்கள். உங்களை வீட்டில் இருந்து வெளியே இழுத்து போட்டு நாய்களை போன்று அடித்து, உதைத்து விடுவேன்.

உங்களை அடிப்பதற்கு உத்தர பிரதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோரை அழைத்து வருவேன்”
என்று கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of