ரஜினியை இயக்கும் பாஜக..? வெளியான முக்கிய தகவல்..!

5838

கட்சி ஆரம்பிக்கப்போவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்த ரஜினிகாந்த், அதன்பிறகு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று ரஜினி அறிவித்துள்ளார்.

மேலும், பெருந்தொற்று பரவல் காரணமாக தான், இவ்வளவு நாள் கட்சி தொடங்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, தமிழக பாஜகவில் அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவராக இருக்கும் அர்ஜுன மூர்த்திக்கு, ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைத்துள்ளது.

இதனால், ரஜினிக்கும், பாஜகவிற்கு தொடர்பு இருக்கிறதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், வாக்குகளை சிதற வைப்பதற்கான செயல்பாடாக கூட இது இருக்கலாம் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Advertisement