பொது இடத்தில் மனைவிக்கு செய்த கொடூரம்..! பாஜக தலைவர் சஸ்பெண்ட்..! தலைமை அதிரடி..!

262

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லியில் உள்ள மெஹ்ராலி மாவட்ட பாஜக தலைவர் ஆசாத் சிங் மற்றும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர்.

ஆசாத் சிங்கின் மனைவி டெல்லி மாநகராட்சியின் முன்னாள் மேயர் ஆவார். இந்நிலையில் கூட்டம் முடிந்து அணைவரும் வெளியே வந்த பிறகு, தனது மனைவியை ஆசாத் சிங் அடித்து உதைத்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இதனைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் பதவியில் இருந்து ஆசாத் சிங் அதிரடியாக தூக்கப்பட்டுள்ளார்.

பெண்களின் கன்னியத்தின் மீது எந்தவொரு சமரசமும் இங்கு இல்லை என்றும், இதுகுறித்து ஆய்வு குழு அமைக்கப்பட்டு அந்த நபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of