போதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்

494

திருச்சி மாவட்டத்தில் காரில் போதைப் பொருள் கடத்திய சம்பவத்தில் பாரதிய ஜனதாக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட துணைத்தலைவர் அடைக்கலராஜ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் அபின் என்ற போதைப்பொருளை காரில் கடத்துவதாக, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் ஓருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் டிஎஸ்பி செந்தில்குமார், காமராஜ் ஆகியோர்  தலைமையிலான போலீசார் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் பெரம்பலூரில் ஒரு காரில் அபின் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சி சாலை ரோட்டில் கார் ஒன்றில் இருந்து அபின் கடத்திய அடைக்கலராஜ், ஆறுமுகம், ஜெயப்பிரகாஷ், பாலசுப்ரமணி  ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அடைக்கலராஜ் என்பவர் பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதாக்கட்சியின்  துணைத்தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார்.

மேலும் மாநில ஓபிசி -பிரிவின் செயற்குழு உறுப்பினராகவும் அடைக்கலராஜ் பொறுப்பு வகித்துவருவது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து அந்த 5 பேரையும் போதைப் பொருள் கடத்தல் வழக்கின் கீழ் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

Advertisement