காமராஜர் பற்றி பேச பாஜகவிற்கு தகுதியில்லை – பீட்டர் அல்போன்ஸ்

575

திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தவறுகளுக்கும் ஊழலுக்கும் எதிராக பாஜக அரசு செயல்படுகிறது என்றும் இது போன்ற ஆட்சி தான் வேண்டும் என காமராஜர் விரும்பியதாக கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காமராஜர் பற்றி பேச தகுதியில்லாத கட்சி பாஜக என்று தெரிவித்தார். ப.சிதம்பரம் சிறந்த பொருளாதார நிபுணர் என்றும், பாஜக அரசின் பொருளாதார சீர்கேடுகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் எனவும் அவர் குறிப்பிட்டார்.