வட்டியில்லா விவசாயக்கடன்… 1 ரூபாயில் நாப்கின்.. பாஜக-வின் அதிரடி வாக்குறுதிகள்…

725

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக வின் தேர்தல் அறிக்கையை  இன்று வெளியிட்டது.

இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் ராஜ் நாத் சிங்,  ஆகியோர் பங்கேற்று ”சங்கல் பத்ரா”(உறுதிமொழி பத்திரம்) என்ற பெயரில் 75 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

இந்த தேர்தல் அறிக்கையில் இராமர் கோவில் கட்டப்படும், பொருளாதாரத்தில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியாவை மாற்றுவோம்..

கல்வி சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்வோம்..

வேளாண்மை ஊரக வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்…

தீவிரவாத ஒழிப்பிற்கு நடவடிக்கை எடுப்படும்…..

சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வுதியத் திட்டம் அமல்படுத்தப்படும்..

நாடு முழுவதும் புதிதாக 101 விமான நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…

 நாடும் முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்..

பொது சிவில் சட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்..

முத்தலாக் சட்டத்திற்கு தடை விதிக்கப்படும்..

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு  நடைமுறை எளிமையாக்கப்படும்..

அடுத்த 5 ஆண்டுகளில் 50 நகரங்களில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும்..

2020க்குள் 200 கேந்திர வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்படும்..

நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்..

மத நம்பிக்கையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்..

கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்…

விவசாயிகளுக்கு 1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.. அதற்கான கிரெடிட் கார்டு வழங்கப்படும்..

மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்படும்….

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த கருத்து ஒற்றுமை உருவாக்கப்படும்..

 நாடு முழுவதும் காவல்துறையில் விரிவாக்கம் செய்யப்படும்..

1 ரூபாயில் நாப்கின்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்…

2022க்குள் அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் பைபர் வசதி கொண்ட இணையதள வசதி செய்து தரப்படும்…

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் சட்ட வரைவு 370 ஐ ரத்து செய்யப்படும்…

நாடு முழுவதும் 6000 கி.மீ அளவிற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்…

வாஜ்பாய் கனவை நனவாக்கும் நதிநீர் இணைப்புத் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சபரிமலை அய்யப்பன் கோவில் பாரம்பரியம் பாதுகாக்கப்படும்…

பள்ளிகளில் சமஸ்கிருதம் மொழியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்..

உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற உறுதி அளித்த நிலையில், பாஜக நீட் தொடர்பான எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடாததை அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

 

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of