காஷ்மீர் பிரச்சனைக்கு நேரு தான் காரணம்! அமித்ஷா பகீர் குற்றச்சாட்டு!!

788

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்தும் அலட்சியமாக இருந்ததாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை காங்கிரசார் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் ஆந்திராவில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது,

“நாட்டின் முதல் பிரதமரான நேருவே காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம். காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதேநேரம் ஐதராபாத் விவகாரத்தை சர்தார் படேல் கவனித்ததால், அது இன்று நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. அவரே நாட்டின் முதல் பிரதமராகி இருந்தால், காஷ்மீர் பிரச்சினை இருந்திருக்காது.

நாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களுக்காகவும் பிரதமர் மோடி நாளொன்றுக்கு 18 மணி நேரம் உழைத்து வருகிறார். ஆனால் அவரது நோக்கம் குறித்து நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். பாகிஸ்தான் பிரதமரை நம்பும் நீங்கள், உங்கள் பிரதமரை நம்பவில்லை. மலிவான அரசியலில் ஈடுபடாதீர்கள். மக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement