திமுக-வில் இணைந்த பாஜக மாநிலத் துணைத் தலைவர்..!

450

பாஜக மாநிலத் துணைத் தலைவர் அரசக்குமார் திமுக-வில் இணைந்துள்ள சம்பவம் பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் கடந்த 1 ஆம் தேதி நடந்த திமுக நிர்வாகி திருமண விழாவில் பங்கேற்று பேசிய பி.டி.அரசகுமார், எம்.ஜி.ஆர்-க்கு பின்னர் தான் ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின் தான் என பேசியிருந்தார்.

அத்துடன் ‘காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும் தளபதி அரியணை ஏறுவார். அதையெல்லாம் நாம் பார்த்து அகம் மகிழ்ச்சி அடைவோம். நான் ஏற்கனவே திமுக கரைவேட்டி கட்டியவன்.

எப்பொழுது வேண்டுமானாலும் கட்டிக்கொள்வேன். யாரும் கொடுத்து கட்ட வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறியிருந்தார். பி.டி.அரசகுமாரின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவர் திமுக வில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இதனை நிஜமாக்கும் வகையில் இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற அரசக்குமார் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of