நீங்க யாரும் “Anti Indian” இல்ல! பாஜக மூத்த தலைவர் பேச்சு!

699

பாரதிய ஜனதா கட்சியை அத்வானியுடன் இணைந்து முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 1984ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஆரம்பித்தார்.

இதையடுத்து பாஜக நிறுவப்பட்ட தினம் ஏப்ரல் 6ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கடிதம் எழுதியுள்ளார். மோடியும் அமித்ஷாவும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை தேச விரோதிகள் என கூறிவரும் நிலையில், இதற்கு பதிலடி தரும் விதமாக அத்வானி தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.

”அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை ஒருபோதும் பாஜக தேசவிரோதிகளாக எண்ணியதில்லை என அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

முதலில் தேசம், அடுத்துதான் கட்சி, அடுத்துதான் சொந்த நலன் என குறிப்பிட்டு அத்வானி தனது பிளாக்கில் எழுதியுள்ள கடிதத்தில், ‘பன்முகத்தன்மை மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு மரியாதை அளிப்பதே இந்திய ஜனநாயகத்தின் சாரம்சம் ஆகும்.

ஆரம்பத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி, அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக்கொண்டவர்களை எதிரிகளாக கருதியது இல்லை. ஆனால் அவர்களை நாங்கள் ஆலோசனை கூறுபவர்களாகவே கருதுகிறோம்.

இதேபோல் அரசியல் ரீதியாக வேறுபாடுகளைக் கொண்டவர்களை நாங்கள் ஒரு போதும் தேச விரோதிகளாக கருதியது இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட முறையில் விரும்பும் அரசியலை தேர்வு செய்வதற்கு பாரதிய ஜனதா ஆரம்பத்தில் இருந்தே உறுதி அளித்துள்ளது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of