தவறான பாதையில் சென்ற பாஜக தலைவர் கார் – காவலரை இடித்து தூக்கிய பதைபதைக்கும் காட்சி

671

ஹரியானாவில், தவறான பாதையில் சென்ற பா.ஜ.க தலைவர் காரை நிறுத்திய காவலரை,  இடித்து தூக்கி 200 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானாவில் ஊர்க்காவல்படை வீரர் மோனு யாதவ் என்பவர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியில் தவறான பாதையில் வந்த பா.ஜ.க தலைவர் சதீஷ்கோடாவியை ஊர்க்காவல் படை வீரர் மோனு யாதவ் தடுத்து நிறுத்தி உள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க தலைவர் சதீஷ் கோடாவி, ஊர்க்காவல் படை வீரரை   இடித்து தூக்கி, காரின் மேலே தூக்கியபடி அவரது உயிருக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில்  200 மீட்டர் தூரம் வரை  இழுத்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of