“டவுசரை கழட்டிவிடுவேன்”! பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு!

244

மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ். இவர் மெதினிபூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இவரின் புகைப்படம் அடங்கியுள்ள பதாகைகள், தேர்தல் விதிகளை மீறி இருந்ததால் வைத்திருந்த இடத்தில் இருந்து தேர்தல் அதிகாரிகள் மூலம் அங்கிருந்து நீக்கப்பட்டது.

இதனை அறிந்த திலிப் கோஷ், கடும் கோபத்துடன் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில்,

“பதாகையை அகற்றும் போது நான் அங்கு இருந்திருந்தால் அந்த அதிகாரியின் டவுசரை கழட்டி இருப்பேன்”

என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

பாஜக முன்னனி தலைவரின் இந்த மிரட்டலையடுத்து, தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பாஜக தலைவரின் இந்த பேட்டிக்கு, எதிர்கட்சி தலைவர்கள் பலர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of