கட்சி மாறியது கூட தெரியவில்லை.. பாஜக தலைவருக்கு காங்கிரஸில் உயர் பதவி..

1291

மத்தியப் பிரதேசத்தில் இளைஞர் காங்கிரஸ் பொறுப்புகளைத் தேர்ந்தெடுக்கும் பணி நடந்து முடிந்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில், ஜபால்பூரின் பொதுச் செயலாளர் பதவிக்கு, ஹர்ஷித் சிங்காய் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், அவர் கடந்த மார்ச் மாதமே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துவிட்டார்.

இதுகுறித்து பேசிய ஹர்ஷித் சிங்காய், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது நகைப்புக்குரியது.

காங்கிரஸில் தேர்தல் இப்படித்தான் நடக்கிறது என்று தெரிவித்தார். ‘ஹர்ஷித் சிங்காய் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை’ என்று இளைஞர் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement