” ராகுல் காந்திக்கு திருமணமே நடக்காது?” சாபம் விட்ட பாஜக தலைவர் பாய்ச்சல்!

622

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்த கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜ.க வெளிப்படையாகவே பல முயற்சிகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்றும், அதே போல் சித்தராமையா தனது வாழ்நாளில் மீண்டும் முதலமைச்சராக மாட்டார் எனவும் தெரிவித்தார்.

ஈஸ்வரப்பாவின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of