மாயமான பாஜக தலைவர் மகன்..! – கடற்கரையில் பிணமாக மீட்பு..!

756

தெலங்கானா மாநிலத்தின் பாஜக தலைவரின் மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா மாயமாகி இருந்த நிலையில் தற்போது அவரது உடல் பிரிட்டனில் ஒரு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மன் மாவட்ட பாஜக பிரிவின் தலைவர் உதய் பிரதீப். இவரது மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா. 23 வயதாகும் இவர் இங்கிலாந்தில், இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவியலில் எம்.எஸ். படித்து வந்தார். தினசரி பெற்றோருடன் தொலைபேசியில் பேசிவிடும் உஜ்வால், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் பேசவில்லை.

இதனையடுத்து மகன் மாயமானது தொடர்பாக உதய் பிரதீப், லண்டன் போலீசாரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அப்போது உஜ்வாலின் பை மட்டும் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மாயமான உஜ்வால் ஸ்ரீஹர்ஷாவின் உடல் பிரிட்டனில் ஒரு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீஹர்ஷாவின் குடும்பத்தினர் உடலை அடையாளம் காட்டி உறுதி செய்தனர். மரணத்திற்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of