தேமுதிக தலைவரை சந்தித்தது இதற்காக தான்…, பியூஷ் கோயல் அதிரடி

511

இந்தாண்டு நடக்க இருக்கின்ற நாடாளமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜக ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதில் பாமகவுக்கு 7 இடங்களும், பாஜகவுக்கு 5 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த, பாஜகவை சேர்ந்த ரெயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்தார்.அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தோம், இந்த சந்திப்பின் போது பாஜக சார்பில் சமிழிசை சவுந்திரராஜன், பொன்.ராதா கிருஷ்ணன், தேமுதிக சார்பில் பிரேமலதா, சுதீஷ் உள்பட பலர் இருந்தனர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல் கூறுகையில்,

“இந்த சந்திப்பிள் விஜயகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். இந்த சந்திப்பும் அவரின் உடல் நலம் குறித்து விசாரிக்க மட்டுமே நடைபெற்றது. தேர்தல் கூட்டணி குறித்து எதும் பேசவில்லை” என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of