குண்டு வெடிக்காமல் இருக்க பாஜக ஆட்சி தொடர வேண்டும்! சுப்ரமணியன் சுவாமி!

729

உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை உற்ச்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்துவர்கள் தேவாலயங்களில் சென்று வழிபாடு நடத்தினார்கள்.

இலங்கை கொச்சிக்கடாவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்திலும், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு தேவாலயத்திலும், கிங்ஸ்பெரி தேவாலயத்திலும், பட்டிக்கலாவ் தேவாலயம் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

மேலும் சின்னமன் கிராண்ட் என்கிற 5 நட்சத்திர விடுதியிலும், ஷங்கிரி லா என்கிற 5 நட்சத்திர விடுதியிலும் குண்டுவெடிப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,

“இலங்கையில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு போல் இந்தியாவில் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சி தொடர வேண்டும். காங்கிரஸ் கட்சி தீவிரவாதிகளின் நட்பு கட்சி. பாஜக ஆட்சி தொடர்ந்தால் மட்டுமே இந்தியாவில் தீவிரவாதம் இருக்காது”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

newest oldest most voted
Notify of
Gawaskar.p
Guest
Gawaskar.p

Adha solla ivanukkulam yenna thagudhi iruku… Saga manidhar ah maddhikka theriyadha ivan lam manushane Ila.