டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வைத்திலிங்கம் பங்கேற்றது ஜனநாயக மாண்பை மீறிய செயல்

391

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில், அனைவருக்கும் நடுநிலையாக செயல்படக்கூடிய சபாநாயகர் வைத்திலிங்கம் கலந்து கொண்டது, ஜனநாயக மாண்பை மீறிய செயல் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரியும், மாநில அந்தஸ்து தர வலியுறுத்தியும் டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.  இதனையடுத்து, பாஜக மாநில தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்திற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் சென்றதால் அரசு பணிகள் பாதித்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், இந்த போராட்டத்தில், அனைவருக்கும் நடுநிலையாக செயல்படக்கூடிய சபாநாயகர் வைத்திலிங்கம் கலந்து கொண்டது ஜனநாயக மாண்பை மீறிய செயல் என்றும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயல் எனவும் அவர் தெரிவித்தார். இது குறித்து, நாடாளுமன்ற சபாநாகர் சுமித்ரா மகாஜனிடம், புதுச்சேரி மாநில பாஜக சார்பில் புகார் அளிக்கப்படும் சாமிநாதன் கூறினார்