சீருடை மாற்றம்! நச்சுன்னும் நகைச்சுவையாகவும் பதில் சொன்ன தமிழிசை!

865

உலகக்கோப்பை கிரிக்கெட் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகின்றது. இதனிடையே இந்திய அணியின் சீருடையை இந்திய கிரிக்கெட் கவுன்சில் மாற்றியுள்ளது.

இந்த சீருடை மாற்றத்தை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவரிடம் கிரிக்கெட் அணியின் சீருடை மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது சிரித்த அவர், காவி வரும் இடங்களில் எல்லாம் பாஜகவை இணைத்து விடுவது வேடிக்கை அளிப்பதாகத் தெரிவித்தார்.

வானவில்லில் கூடத் தான் அந்த நிறம் உள்ளது என்று கூறிய அவர், விட்டால் அதில் இருந்தும் நீக்கச் சொல்வீர்களா என்று நகைச்சுவையுடன் வினவினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of