பிரதமர் மோடியை போன்று டுவிட்டரில் பெயர் மாற்றும் பாஜக தலைவர்கள் – தமிழிசையும் மாற்றினார்

185

பிரதமர் மொடியை பின்பற்றி டுவிட்டரில் பாஜக தலைவர்கள் Chowkidar என்ற பெயரை தனது பெயருடன் இணைத்து வருகின்றனர்.

இதில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அருண் ஜெட்லி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் தனது பெயருடன் Chowkidar என்ற பெயரை இணைத்துள்ளனர்.

அதாவது இந்தி மொழியில் Chowkidar என்றால் நானும் பாதுகாவலனே என்று அர்த்தம்.

ரஃபேல் போர் விமான பிரச்சனையில் இந்நாட்டின் பாதுகாவலரே பெரிய திருடனாக உள்ளார் என்று ராகுல் குறிப்பிட்டார்.

ரஃபேல் ஊழல் குறித்து விமர்சித்த ராகுல் தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று குறிப்பிட்டார். இந்த ஹேஷ்டேக் உலகம் முழுவதும் டிரென்ட் ஆனது. இது பாஜகவுக்கு கடும் கோபத்தை கிளப்பியது.

இதற்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி Chowkidar என்று தனது பெயருடன் இணைத்துக்கொண்டார்.

இந்த பெயரை பாஜக வின் முக்கிய தலைவர்களும் டுவிட்டரில் தனது பெயருடன் இணைத்து வருகின்றனர்.