பெண்ணிடம் அத்துமீறிய பாஜக அமைச்சர்!! இணையத்தில் வெளியாகிய வீடியோ

662

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜெகர்ஹோலி, பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரின் ஆபாசப்படம் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக உள்ளவர் ரமேஷ் ஜெகர்ஹோலி. இவர் பெண் ஒருவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, சமூக ஆர்வலர் தினேஷ் என்பவர், பெங்களூரு காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோவை காவல் ஆணையரிடம் சமர்பித்துள்ளதாக சமூக ஆர்வலர் தினேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபோது, அந்த பெண் அதனை வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பாலியல் அத்துமீறல் புகாரையடுத்து அமைச்சர் ரமேஷ் ஜெகர்ஹோலி உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரு, சிவமொக்க உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அமைச்சர் மீதான பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதால், அமைச்சர் ரமேஷ் ஜெகர்ஹோலி இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement