போதைப்பொருள் குற்றவாளி.. கேக் ஊட்டிய பாஜக அமைச்சர்.. பரபரப்பு சம்பவம்..

395

கன்னட திரையுலகை கதிகலங்க வைத்து வரும் போதை பொருள் விவகாரம் தற்போது அரசியல் பிரமுகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

போதை பொருள் வழக்கில் கைதானா ராகிணி, சஞ்சனா, ராகுல், வீரேன் கண்ணா ஆகியோர் 34க்கும் அதிகமான அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தனர்.

அதன்படி நேற்று மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜீவராஜின் மகன் ஆதித்யா ஆல்வாவின் ரிசார்ட்டில் சி.சி.பி அதிரடி சோதனை நடத்தியுள்ளது.

இந்நிலையில் போதை பொருள் வழக்கில் சிறை சென்றுள்ள ராகுலுக்கு பாஜவை சேர்ந்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.அசோக் கேக் ஊட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் போதை பொருள் வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது என்று கூறப்பட்டு வரும் நிலையில், அசோக், ராகுல் போட்டோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement