முதலமைச்சர் பழனிசாமியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு

431

முதலமைச்சர் பழனிசாமியை தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் அடுத்தடுத்து சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்றிரவு சந்தித்து பேசினார். இதைதொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து முதலமைச்சரிடம் பேசியதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும், தனது தொகுதி குறித்து மட்டுமே பேசியதாக கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of