பாஜக எம்.எல்.ஏ மனைவிகள் குழாயடி சண்டை – எம்.எல்.ஏ விற்கும் தர்ம அடி (VIDEO)

358

பாஜக எம்.எல்.ஏ ராஜூ டோட்சம் பிறந்தநாளில் அவரது இரு மனைவிகளும் சண்டையிட்டுக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் யவாத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த கேளாபூர் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜூ டோட்சம். பந்தார்கௌடாவில் இவர் கலந்து கொண்ட கபடி நிகழ்ச்சியிலேயே இவரது பிறந்தநாளை கொண்டாட ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த விழாவில் ராஜூவின் இரண்டாவது மனைவி பிரியா கலந்து கொண்டார். அப்போது அந்த இடத்துக்கு ராஜூவின் முதல் மனைவி அர்ச்சனாவும் அவரது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார்.

 

அப்பொழுது இருவருக்கும் இடையே திடீரென் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரியாவும் அர்ச்சனாவும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். நடுவில் சிக்கிக் கொண்ட எம்எல்ஏவிற்கும் சில அடிகள் விழுந்தன.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து விட்டால் போதும் என பிரியாவும் எம்எல்ஏவும் தப்பியோடினர். எனினும் அர்ச்சனா அவரது ஆதரவாளர்களுடன் விடாமல் துரத்தி செருப்பால் தாக்கினார்.

இதனையடுத்து பிரியாவும் எம்எல்ஏவும் பந்தார்கௌடா காவல் நிலையத்தில் அர்ச்சனா மீது புகார் கொடுத்தனர். இதனிடையே இரு மனைவிகளின் சண்டையில் சிக்கித் தவித்த எம்எல்ஏ வின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.