மோடி முன்பு பெண்ணிடம் சில்மிஷம் செய்த பாஜக அமைச்சர்!

105
bjp minister tripura

பெண் அமைச்சரின் இடுப்பில் பாஜக அமைச்சர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரிபுரா மாநிலத்தின் சமூக நலம் மற்றும் சமூக கல்வி துறை அமைச்சராக இருப்பவர் சாந்தனா சக்மா. இவர் பழங்குடியினத்தவர்களின் தலைவராகவும் உள்ளார்.

வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி திரிபுரா மாநிலத்தில் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அதில் முதல்வர் பிப்லாப் குமார் தேவ், பெண் அமைச்சர், உணவுத்துறை, விளையாட்டுத் துறை, இளைஞர் நலன் துறை அமைச்சர் மோனோஜ் காந்தி தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர். கையை தட்டிவிட்ட அமைச்சர் அப்போது பெண் அமைச்சரின் பின்னர் பாஜக அமைச்சர் மோனோஜ் தேவ் நின்றிருந்தார். பொது மேடையில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர், தொண்டர்கள் இருந்த மேடையில் பெண்ணின் இடுப்பில் நைசாக கை வைத்தார். உடனே அந்த பெண் அமைச்சர் கையை தள்ளிவிடும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

minister tripura

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இடதுசாரி கட்சியினர் மனோஜ்குமார் தேவுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் மாநில பாஜகவோ சம்பந்தப்பட்ட பெண் அமைச்சரே இதுகுறித்து புகார் கூறாத போது இடதுசாரிகள் ஏன் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாஜக அமைச்சரின் இத்தகைய செயலால் சமூக வலைதளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.