இராணுவ வீரரின் இறுதி ஊர்வலத்தில் சிரித்த பாஜக எம்.பி

884

புல்வாமா தாக்குதலில் பலியான இராணுவ வீரரின் இறுதி அஞ்சலியில் பாஜக எம்.பி ஒருவர் சிரித்தபடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவு மாவட்டத்தில் புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்  அஜித் குமார் ஆசாதுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி நடைபெற்றது. இந்த இறுதி அஞ்சலிக்கு பாஜக எம்.பி சாக்‌ஷி மஹராஜ் கலந்துகொண்டார்.

அப்பொழுது இராணுவ வீரரின் உடலை சுமந்து வந்த ட்ரக்கில் இராணுவ வீரர்கள், அரசு அதிகாரிகளுடன் பாஜக எம்.பி சாக்‌ஷி மகராஜும் ஏறி வந்தார்.

அப்பொழுது அவர் ட்ரக்கில் சிரித்தபடி இருந்ததாக தெரிகிறது. இந்த வீடியோ கேமராவில் பதிவானதையடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இராணுவ வீரரின் இறுதி அஞ்சலியில் பிரச்சார வாகனத்தில் வருவதுபோல சிரித்தபடி வருவதா என அரசியல் தலைவர்களும்,பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் ப்ரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் பதிவில்; பாஜக எம்.பி யை கடுமையாக விமர்சித்தார். இவர்களுக்கு இப்படி நடந்துகொள்வதில் அவமானமாக இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் இதுகுறித்து பல்வேறு தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்த அஞ்சலி ஊர்வலம் இராணுவ வீரருக்கானது. பாஜக ஊர்வலம் அல்ல என சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of