தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் – பாஜக எம்.பி கடிதம்

186

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி பிறந்தார். இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார்.

அப்துல் கலாம் அவர்கள் 2015-ம் ஆண்டு ஜூலை 27ந் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இதனை தொடர்ந்து அப்துல் கலாம் பிறந்தநாளான அக்டோபர் 15-ந் தேதியை உலக மாணவர் தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் என ஐநா அறிவித்தது.

இந்நிலையில், அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாகவும் அறிவிக்க வேண்டுமென பா.ஜ.க முன்னாள் எம்.பி. ஆனந்த் பாஸ்கர் ரபோலு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of