ஒருவரையொருவர் செருப்பால் அடித்துக்கொண்ட பாஜக – எம்.பி – எம்.எல்.ஏ – வீடியோ உள்ளே…

316

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வும், எம்.பி-யும் ஒருவரை ஒருவர் செருப்பால் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

shoe attack

உத்தரபிரதேச அமைச்சர் அசுதோஷ் டாண்டன் தலைமையில் பா.ஜ.க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சாந்த்கபீர் நகர் தொகுதி எம்.பி சரத் திரிபாதியும், சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங் பாகல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அடிக்கல்லில் யார் பெயரை பொறிப்பது என்பதில் எம்.பி-க்கும், எம்.எல்.ஏ-க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சரத் திரிபாரி தனது காலணியை கழற்றி, ராகேஷ் சிங்கை அடித்தார். பதிலுக்கு ராகேஷ் சிங்கும் தாக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of