அமேசானில் ஆர்டர் செய்த போன்..! பார்சலை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..! BJP MP பகீர் புகார்..!

1667

முன்பெல்லாம் எதவாது பண்டிகையென்றால், கடைத்தெருவிற்கு சென்று பொருட்களை பேரம் பேசி வாங்கி வந்தனர். நாட்கள் செல்ல செல்ல அந்த பழக்கம் மறைந்து, பிக்சட் பிரைஸ் எனப்படும் ஒரே விலை என்ற வழக்கம் வந்தது. இது ஒரு புறம் இருக்க, தற்போது ஆன்லைன் விற்பனையும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்த ஆன்லைன் வியாபாரத்தில், அமேசான், ப்ளிப்கார்ட் என்ற இணையதளம் தான் முன்னணியில் இருந்து வருகிறது. அதிலும், அமேசான் தான் தற்போது முதலிடத்தில் இருக்கிறது.

ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதில் சில நேரங்களில் பிரச்சனையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தின் வடக்கு மால்டா பகுதியை சேர்ந்த BJP நாடாளுமன்ற உறுப்பினர் காஜென் முர்முவின் மகன், அமேசானில் செல்போன் ஆர்டர் செய்துள்ளார்.

அவரது வீட்டிற்கு அந்த செல்போனின் பார்சலும் டெலிவரி செய்யப்பட்டது. பார்சலை திறந்து பார்த்தால், கற்கள் இருந்துள்ளதாக அவர் அமேசான் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

நாள்தோறும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் பொருட்களை வாங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement