மோசடி வழக்கில் சிக்கிய பாஜக தேசிய பொதுச்செயலாளர்! பரபரப்பு தகவல்!

1227

பாஜகவை சேர்ந்த ஈஸ்வர் ரெட்டி என்ற நபர், ஹைதராபாத்தில் வசித்து வரும் மஹிபால் ரெட்டி மற்றும் அவரின் மனைவி ப்ரவர்ணா ரெட்டி ஆகியோருக்கு வேலை வாங்கி தருவதாக சில மாதங்களுக்கு முன் அணுகி இருக்கிறார்.

மத்திய அரசின் வர்த்தக துறையில் வேலை வாங்கித்தரப்படும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவையும் இவர்களுக்கு ஈஸ்வர் அறிமுகம் செய்துள்ளார்.

இதையடுத்து வேலை வாங்கி தருவதாக ரூபாய் 2.1 கோடி இவர்களிடம் இருந்து வாங்கப்பட்டு இருக்கிறது. வேலை வாங்கி கொடுப்பதற்கான பத்திரத்தையும் இவர்களிடம் கொடுத்துள்ளனர்.

அதேபோல் வேலைக்கான அப்பாயின்மென்ட் கடிதத்தையும் மத்திய வர்த்தக அமைச்சகத்தில் இருந்து பெற்று தந்துள்ளனர். இதில் அப்போதைய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையெழுத்தும் இருந்துள்ளது.

ஆனால் மஹிபால் ரெட்டிக்கு எந்த விதமான வேலையும் கடைசி வரை வாங்கி தரப்படவில்லை. இதில் இருக்கும் கையெழுத்தும் நிர்மலா சீதாராமனின் கையெழுத்து இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மோசடி, போர்ஜரி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட 9 பேர் மீது ஹைதராபாத் போலீசில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இது பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement