பாஜக தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது

431

பாஜக தேசிய நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் தொடங்கியுள்ளது.

கட்சித் தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி நட்டா, உமா பாரதி, முன்னாள் முதலமைச்சர்கள் வசுந்தர ராஜே சிந்தியா, ரமன் சிங், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசில், அமித் ஷா உள்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளதால், கட்சித் தலைவர் பதவிக்கு புதிய நபரை தேர்வு செய்வது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், கட்சிக்கான அமைப்பு தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

Advertisement