பாஜகவின் மக்கள் விரோத போக்கை பரப்ப முடிவு

339

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை புதுச்சேரி முழுவதும் பரப்புரை மூலம் கொண்டு செல்ல காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி செயற்குழுக்கூட்டம் 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இதில் முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் பிரச்சார, குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதில் வார்டுகள் தோறும் கட்சி பணிகள் ஆற்றுவது, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை மக்கள் மத்தியில் மாநிலம் முழுவதும் பரப்புரை மூலம் கொண்டு செல்வது, கட்சிக்கு நிதி திரட்டுவது, கூட்டணி கட்சிகளோடு சந்தித்து காங்கிரசுக்கு வாக்குகளை சேகரிப்பது என பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.