உ.பி-யில் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு..,

324

பிரபல நடிகை ஜெயப்பிரதா பாஜக-வில் இணைந்தார். அதுமட்டுமின்றி இணைந்த கையோடு அவருக்கு சீட்டும் அளிக்கப்பட்டது, அதுமட்டுமின்றி அவரின் பரம எதிரியான ஆசம்கானை எதிர்த்தும் போட்டியிடுகின்றார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் போட்டியிட உள்ள 39 வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக தலைவர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரபிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுகிறார்.

மேனகா காந்தி சுல்தான்பூரிலும், வருண் காந்தி பிலிபித் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்காளத்தின் அல்பேரியா தொகுதியில் நடிகர் ஜாய் பானர்ஜி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of