ஸ்டாலினுக்கு இந்த வீக்னஸ் இருக்கிறதா? தமிழிசை கடும் தாக்கு!

552

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, மத்திய அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை செயல்படுத்த போவதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மு.க.ஸ்டாலின் நினைவாற்றலோடு இருக்கிறாரா? என தெரியவில்லை எனவும், பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவும் கூறினார். மேலும், அதிமுகவை நாங்கள் மிரட்டுவதாக கூறுகின்றனர்.

நாங்கள் தோழமையோடு தான் உள்ளோம் என்பது அதிமுக தேர்தல் அறிக்கையிலேயே தெளிவாக தெரிகிறது.

ஸ்டாலின் தான் சர்வதிகாரி போல நடந்துகொள்வதாகவும் தெரிவித்த அவர், தமிழகத்தில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைத்திருப்பதாகவும்,மாபெரும் வெற்றி அடைவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of