டிக்கெட் எடுத்து தரோம்…பாகிஸ்தான் சென்று உடல்களை எண்ணிப்பாருங்க.. பாஜக எம்.எல்.ஏ பேச்சு

244

புல்வாமா தாக்குதலில் 44 துணை ராணுவ படையினர் பலியாகினர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கியது. இந்த தாக்குதலில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறியது.

ஆனால் இந்த எண்ணிக்கையின் உண்மை தன்மை பற்றி காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர்.
இந்த நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜா சிங் பேசும்பொழுது, அனைவரும் இந்திய விமான படை தாக்குதல் பற்றி எங்களுக்கு சான்று வேண்டும் என கேட்கின்றனர்.

அதனால் நாம் அனைவரும் தலா ரூ.100 பணம் சேர்த்து, இவர்களுக்கு டிக்கெட்டுகள் வாங்கி கொடுப்போம். இந்திய விமான படை மீது சந்தேகம் உள்ளவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும். அங்கு பலியானவர்களின் உடல்களின் எண்ணிக்கையை அவர்கள் கணக்கிடட்டும் என கூறியுள்ளார்.

அரசிடம் முறையாக கேள்வி கேட்டால் அரசு தகுந்த பதிலளிக்காமல் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.