தமிழக பாஜக தலைவர் யார்? – ஒருவழியாக முற்றுப்புள்ளிவைத்த கட்சி தலைமை..!

560

தமிழக பாஜக தலைவர் யார் என்பது தொடர்பான விவகாரத்தில் வதந்திகளை கட்சியினர் நம்ப வேண்டாம் என்று பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனதுமுகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநிலத் தலைவர் பற்றி பல்வேறுவிதமான வதந்திகளும், சித்தரிப்புகளும் கடந்த பல நாட்களாக பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப கற்பனை செய்து கொண்டு செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இவை உண்மைக்கு மாறானவை.

தமிழக பாஜக தலைவர் யார் என்று இன்னும் முடிவாகவில்லை. இதற்கு இன்னும் ஒருசில வாரங்கள் ஆகும். முடிவாகும்போது அந்ததகவல் அதிகாரப்பூர்வமாக கட்சிசார்பில் அறிவிக்கப்படும்.

தவறான தகவல்களை தந்துநமக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள். இவ்வாறு கேசவ விநாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of