போர் வரும் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? பவன் கல்யாண்

678

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவிய நிலையில் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா “இந்தியாவின் அதிரடி தாக்குதல், கர்நாடகாவில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றிப்பெற உதவியாக இருக்கும்,” என்று கூறியது சர்ச்சையாகியது. பின்னர் அவர் அப்படி கூறவில்லை என மறுத்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநில முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக போர் இருக்கும் என்று பா.ஜனதா கூறியிருந்தது என பேசியுள்ளார்.ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் பவன் கல்யாண் தேர்தல் பிரசாரத்தில் பேசினார். அவர் பேசுகையில், “இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே போர் வருகிறது என என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இப்போது நம்முடைய நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையில் நீங்க புரிந்துக்கொள்ளலாம். எந்த பிரச்சனைக்கும் போர் தீர்வாகாது, இருநாடுகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்,” என்றார்.

தேசப்பற்று என்பது பா.ஜனதாவிற்கு மட்டுமான உரிமை கிடையாது. பா.ஜனதாவினரைவிட 10 மடங்கு நாங்கள் தேசப்பற்றாளர்கள். இஸ்லாமியர்கள் தங்களுடைய தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சமூதாயத்தில் வகுப்புவாத சீரழிவை ஏற்படுத்துபவர்களின் முயற்சியை ஜனசேனாவினர் முறியடிக்க வேண்டும்.

இந்தியாவில் இஸ்லாமியர்களும் சமமான உரிமையை பெற்றுள்ளார்கள். பாகிஸ்தானில் இந்துக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை, ஆனால் இந்தியா இஸ்லாமியர்களை இதயத்தில் வைத்துள்ளது. அசாரூதீன் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அப்துல்கலாம் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார் என பவன் கல்யாண் பேசியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of