துடைப்பத்தால் துடைத்தெறியப்பட்ட பிரச்சாரம்.. வாக்குசதவீதத்தில் பெஸ்ட் காட்டிய பாஜக.. சரிந்துபோன காங்கிரஸ்..!

1236

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஏறத்தாழ ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் நிலை உருவாகியுள்ளது.

காங்கிரஸ், பாஜக-வின் தீவிர பிரச்சாரங்களையும் தாண்டி ஆம் ஆத்மி கட்சி மக்களிடையே நிலைத்திருக்கிறது என்பதை முன்னிலை நிலவரங்கள் உணர்த்துகின்றனர்.

மதரீதியான பிரச்சாரம், தனிநபர் விமர்சனம் உட்பட பல்வேறு விமர்சனங்களையும் துடைப்பத்தால் துடைத்தெறிந்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 5 ஆண்டு கால ஆட்சி காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை டெல்லியில் அமல்படுத்தினார். இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என மக்களுக்கு தேவையான அத்தியாவசிய திட்டங்களின் மூலம் டெல்லி மக்களின் ஹீரோவாகியிருக்கிறார் கெஜ்ரிவால்.

இந்த நிலையில் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தற்போதைய நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 52.3 சதவீதமும், பாஜக 40.1 சதவீதமும், காங்கிரஸ் 4.17 சதவீதமும் பெற்றுள்ளன.

கடந்த தேர்தலை விட காங்கிரஸ் கட்சி தற்பொழுது வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அதலபாதாளத்தில் சென்றுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. பாஜக-வை பொறுத்தவரையில் கடந்த தேர்தலில் வாக்குசதவீதத்தில் 10 சதவீதம் மட்டுமே பெற்றிருந்தது. இம்முறை 30 சதவீதம் அதிகமாக பெற்று 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Advertisement