அதிமுக வேட்பாளர்களை பாஜக அறிவிக்கும் – புகழேந்தி அதிரடி!

434

அதிமுக- பாஜக கூட்டணியில் அதிமுக வேட்பாளர்களையும் பாஜக தான் அறிவிக்கும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேனியில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது;

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ க்கள் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாகவும், இது தொடர்பான வழக்கு முடிவுக்கு வரவுள்ளதால் மனக்குழப்பத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவர்களை கட்சிக்கு திரும்ப அழைக்கிறார். இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களும் பதவியை இழக்க நேரிடும் என கூறினார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலுடன் இணைத்து நடத்த தயாரென தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரங்களில் முடித்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியானால் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என கூறினார்.

மேலும் தெரிவித்த அவர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தால் அதிமுக வேட்பாளர்களையும் பாஜக தான் அறிவிக்கும் என தெரிவித்தார்.