காமராஜர் விரும்பிய ஆட்சியை தமிழக மக்களுக்கு பாஜக கொடுக்கும் – பிரதமர் மோடி

416

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மோடி தோல்வியடைந்து விட்டார் என்று கூறும் எதிர்க்கட்சியினர் எதற்காக மெகா கூட்டணி அமைக்கின்றனர் என்று கேள்வி எழுப்பினார்.

கடல் முதல் வானம் வரை பல்வேறு ஊழல்களை காங்கிரஸ் செய்துள்ளது என்றும், ஊழல்களுக்கும், தவறான செயல்களுக்கும் பாஜக பூட்டுப்போட்டிருப்பதாகவும் தெரிவித்தார். விவசாயிகளையும், இளைஞர்களையும் திசை திருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் அறிவித்ததை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன என்றும், ஆனால், கடன் தள்ளுபடியால் விவசாயிகள் பலன் அடைவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

காமராஜர் விரும்பிய ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை என்றும் இதுபோன்ற நல்ல ஆட்சியை தான் காமராஜர் விரும்பினார் எனவும் தெரிவித்தார்.