பாஜக தலைமையில் தான் கூட்டணி – வி.பி.துரைசாமி

305

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக-அதிமுக என்ற நிலை மாறி, திமுக – பாஜக என்ற நிலை உருவாகியுள்ளதாக கூறினார். நிச்சயமாக தங்கள் தலைமையிலான கூட்டணி தான், தாங்கள் இருக்கின்ற பக்கம் தான் நிச்சயம் வெல்லும் என்றார்.

பாஜக-வை எந்த கட்சி அனுசரித்து செல்கிறதோ அவர்களுடன் கூட்டணி அமையும் என்றும் பாஜக தலைமையில் தான் ஆட்சி நடைபெறும் எனவும் கூறினார். திமுகவில் இருந்து பாஜகவிற்கு நிச்சயம் நிறைய பேர் வருவார்கள் என்று ஆரூடம் தெரிவித்தார்.

Advertisement