பாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்! சிறப்புத் தொகுப்பு..!

764

கடல் தன்னுள் ஆயிரமாயிரம் ரகசியங்களையும், விசித்திரங்களையும் புதைத்து வைத்துள்ளது. கடலின் ஆழத்தை மட்டுமல்ல, அதில் ஒளிந்திருக்கும் ரகசியங்களையும் அறிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இத்தகைய கடலில் ஒளிந்திருக்கும், மிகவும் வித்தியாசமான உயிரிணம் பற்றி தற்போது பார்க்கலாம்.

கரீபியன் கடல் பகுதியில், பவளப்பாறைகளுக்குள் வசிக்கும் மீன் வகைதான் இந்த ப்ளூஹெட் வ்ரேசஸ். இந்த மீன்கள் தங்களின் பாலினத்தை மாற்றிக்கொள்ளும் அபார திறன் கொண்டது.

இந்த வகை மீன்கள் தங்களின் பாலினத்தை எவ்வாறு மாற்றிக்கொள்கிறது என்பதை கண்டறிய பல்வேறு ஆராய்ச்சிகளை அறிவியலாளர்கள் மேற்கொண்டு வந்தனர். அதற்கான காரணம் நீண்ட காலமாக கண்டறியப்படாத நிலையில், தற்போது தெரிய வந்துள்ளது.

நீல நிறத்தில் தலையை கொண்டவை ஆண் மீன்கள், மஞ்சள் நிறத்தில் தலையை கொண்டவை பெண் மீன்கள். ஆண் மீன்கள் பெரும்பாலும் பெண் மீன்களை பாதுகாக்கும் பண்புகள் கொண்டவை.

கூட்டத்தை பாதுகாக்கும் ஆண் மீன் கூட்டத்திலிருந்து நீங்கி விட்டாலோ அல்லது இறந்து விட்டாலோ, அந்த கூட்டதிலிருக்கும் மற்றொரு பெரிய பெண் மீன், ஆணாக மாறி கூட்டத்தை பாதுகாக்க தொடங்கி விடும்.

பாலினம் மாறிய அந்த மீனுக்கு கருப்பை உறுப்பு விந்தகமாக மாறி, உயிரணுக்களும் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த மீன்களால் மட்டும் இது எப்படி நிகழ்;த்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில், கோனாடு (புழயென) என்ற பிறப்புறுப்பு தொடர்பான பகுதியில் நடக்கும் மரபணு சீர்திருத்தம்தான் இதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது அந்த மீனுக்குள்ளயே பெண் உறுப்புகளும் ஆண் உறுப்புகளும் இருக்குமாம். ஆண் மீன்கள் பிரியும் நேரங்களில், பெண் மீன்களின் உடலுக்குள் இயற்கையாகவே, பெண் உறுப்புகளின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, பின் ஆண் உறுப்புகளின் செயல்பாடு தொடங்கப்படுகிறது. இன்னும் விளக்கமாக கூறினால், ஒரு ஸ்விட்சை ஆப் செய்து விட்டு மற்றொரு ஸ்விட்சை ஆன் செய்வது போன்றதாகும்.