ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு: மீட்பு பணிகள் தீவிரம்!

300
ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தெருக்கள் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் வீடுகள் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் அடுத்த ஐந்து தினங்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of