எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் விபத்து

583

கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்யா. இந்த நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள் 8 ஊழியர்களுடன் இன்று காலை கென்யா தலைநகர் நைரோபி நகருக்கு புறப்பட்டது.ஆனால், நைரோபி செல்லும் வழியில் இந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 149 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இப்பகுதியில் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. விபத்தில் உயிரோடு இருப்பவர்கள் குறித்த எந்தவிதமான உறுதியான தகவலும் இல்லை ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ” எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் போயிங் 737 விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of