தற்காலிக தடை உறுதி. – விமான போக்குவரத்து இயக்ககம்.

203
boeing737max8

சில தினங்களுக்கு முன் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் அந்நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியதில், 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சோக நிகழ்விற்கு முன்னே இந்த ரக விமானங்கள் அண்மைக்காலமாக அவ்வப்போது பழுதாவதாக பல நாடுகள் தெரிவித்தன. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இந்த ரக விமானங்களை தவிர்த்து வந்த நிலையில், தற்போது இந்தியாவிலும் நமது நாட்டிற்குட்பட்ட வானெல்லையில் இந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் இயக்க தற்காலிக தடை விதிப்பதாக இந்திய விமான போக்குவரத்துக்கு இயக்ககம் தெரிவித்துள்ளது.

பல நாடுகள் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் பங்கு சந்தையில் போயிங் நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்தன. திங்கள் அன்று 4.8% அளவுக்கும், செவ்வாய் அன்று 5 % அளவுக்கும் போயிங் நிறுவன பங்குகள் சரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானத்தில் உலகில் உள்ள பல நாடுகளின் விமானச்சேவை நிறுவனங்கள் இந்த விமானங்களை வாங்க ஏராளமான அளவில் ஆர்டர் செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது.