உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி

143

அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தாயரிப்பு நிறுவனமான போயிங். கடந்த ஆண்டு போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் 346 பேர் பலியாகினர்.

இதனால் போயிங் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மிகவும் குறைந்தது இதனால் அதிக நெருக்கடியை சந்தித்தது. எனவே மக்கள் மத்தியில் குறைந்துள்ள நம்பிக்கையை அதிக படுத்தும் விதமாக உலகிலயே மிக பெரிய இரட்டை இன்ஜின் விமானத்தை தாயரித்துள்ளது.

அந்த விமானம் போயிங் 777 எக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த விமானத்தின் சோதனை ஒட்டம் 2 முறை மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சியாட்டில் நகரில் வெற்றிகரமாக நடந்தது.

ஒடுதளத்தில் இருந்த புறப்பட்ட விமானம் 4 மணி நேரம் வானில் பறந்து பத்திரமாக தரையிரக்கப்பட்டது.

இன்னும் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விரைவில் சேவையை தொடங்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் மத்தியில் குறைந்துள்ள நம்பிக்கை, இந்த வெற்றியால் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of