போபர்ஸ் பீரங்கி பேர வழக்கு

846

போபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

போபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில், 64 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக, இத்தாலி தொழில் அதிபர் குவாத்ரோச்சி, இந்துஜா சகோதரர்கள், வின்சத்தா, எஸ்.கே.பட்நாகர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அனைவர் மீதான குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து, கடந்த 2005ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, சி.பி.ஐ. சார்பில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேலும், பா.ஜ.க.வை சேர்ந்த வழக்கறிஞர் அஜய் அகர்வால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, இந்திரா பானர்ஜி முன் இன்று விசாரணைக்கு வருகிறது.