அபிநந்தன் குறித்து திமீர் டுவீட்! – பிரபல நடிகை!!

307

பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் பாகிஸ்தானை சேர்ந்த வீணா மாலிக். இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானியர்களிடம் சிக்கியதில் இருந்தே அவரை கலாய்த்து ட்வீட் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அபிநந்தன் உடம்பில் சிப் பொருத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அபிநந்தனின் உடலில் பாகிஸ்தானியர்கள் சிப் பொருத்தியுள்ளனர். இனி அவர் எங்களின் புறா என்று நக்கலாக ட்வீட் செய்துள்ளார் வீணா மாலிக்.

veena maalik

அபிநந்தனின் திறமையை பாராட்டி பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா போட்ட ட்வீட்டை பார்த்துவிட்டு டுவீட் செய்த வீணா மாலிக், அவரின் மிஷன் தோல்வி அடைந்து, விமானம் சுடப்பட்டு, தப்பிக்க முயன்று தோற்று, கொல்லப்பட்டிருக்கக்கூடும்.

veena malik 2

ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தால் காப்பாற்றப்பட்டு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியர்களின் கனவில் தான் எஃப் 16 விமானத்தை சுட்டிருப்பார் என்கிறார்.

வீணா மாலிக்கின் ட்வீட்டை பார்த்த இந்தியர்கள் அவரை விளாசியுள்ளனர். அப்படி இருந்து தொடர்ந்து அபிநந்தன் பற்றி ட்வீட் போடுகிறார் அவர்.

veena malik 3