பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்

243

கடந்த 40 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடன இயக்குநராக இருந்தவர் சரோஜ் கான். இவர் சில தினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் காரணமாக மும்பை பாந்த்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடனடியாக அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் மூச்சு திணறல் பிரச்சனைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சரோஜ் கான் உயிரிழந்தார். இதுவரை 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ள சரோஜ் கான், மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of