சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

164

சென்னை ஐகோர்ட் பதிவாளருக்கு கடந்த 9-ம் தேதி கடிதம் ஒன்று வந்துள்ளது. காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவர் அந்த கடிதத்தை அனுப்பி இருகிறார்.

அதில் நானும் எனது மகனும் சேர்ந்து செப்டம்பர் 30-ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஒரு மாநிலத்தில் இல்லாமல் மாநிலம் விட்டு மாநிலம் பயணம் செய்வதாகவும் எனது செல்போன் நம்பரை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறேன் என்றும் அதனால் தன்னை தேட முயற்ச்சிக்க வேண்டாம்.

மேலும் நாங்கள் தடை செய்யப்பட்ட அதாவது சர்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட் பதிவாளர் சென்னை காவல்துறை ஆணையருக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப்படைக்கும் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த கடிதம் டெல்லியில் ஒரு முகவரியிலிருந்து வந்துள்ளதால் டெல்லி போலீசாரை தமிழக போலீஸ் அணுகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of